உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடை அரங்கநாதர் கோவில் அடைப்பு: பக்தர்கள் தவிப்பு

காரமடை அரங்கநாதர் கோவில் அடைப்பு: பக்தர்கள் தவிப்பு

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவில், அமாவாசை நாளில் அடைக்கப்பட்டதால், கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள், அரங்கநாதப் பெருமாளை வழிபட முடியாமல் தவித்தனர்.

கொரோனா பரவலை தடுக்க, கோவை மாவட்டத்தில் மருதமலை, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் உட்பட, நான்கு கோவில்களை, அமாவாசை முன்னிட்டு அடைக்கும்படி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இந்நிலையில் காரமடை அரங்கநாதர் கோவிலில், பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டு, கோவிலின் நுழைவாயில் கேட்டு அடைக்கப்பட்டிருந்தது. அமாவாசை என்பதால் ஏராளமான பக்தர்கள், அரங்கநாதப் பெருமாளை வழிபட்டு செல்ல, கோவிலுக்கு வந்தனர். ஆனால் கோவில் அடைக்கப்பட்டு இருந்ததால், வாசல் படியிலேயே கற்பூரம் ஏற்றி வழிபட்டு சென்றனர். இருந்த போதும் கோவிலுக்குள் உள்ளே சென்று, அரங்கநாதப் பெருமாளை நேரில் பார்த்து வழிபட முடியவில்லையே, என ஏராளமான பக்தர்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.

இது குறித்து காரமடை அரங்கநாதர் கோவில் செயல் அலுவலர் லோகநாதன் கூறுகையில்," மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அடைக்கப்பட்டுள்ளது. அதனால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவர். இந்த பக்தர்களால், கொரோனா பரவ வாய்ப்பு உள்ளதை அடுத்து, இந்து சமய அறநிலை துறை உயர்அதிகாரிகள், காரமடை அரங்கநாதர் கோவிலில் அடைக்கும்படி கூறினர். அதனால் அரங்கநாதர் கோவில் படைக்கப்பட்டது," என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !