காரைக்காலில் விநாயகர் சிலைகள் விஜர்சனம்
ADDED :1564 days ago
காரைக்கால் : காரைக்காலில் விநாயகர் சிலைகள் கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது. காரைக்காலில் இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தியையொட்டி, ஏழை மாரியம்மன் கோவில், நேருநகர், மதகடி, தலத்தெரு, வலத்தெரு உள்ளிட்ட 50 இடங்களில் 10ம் தேதி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.நேற்று விநாயகர் சிலைகள் கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது. இதற்காக மாவட்டம் முழுவதும் இருந்து விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஏழை மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.விநாயகர் சிலை ஊர்வலம் அமைச்சர் சாய்சரவணன் குமார் தலைமையில் நடந்தது. ஊர்வலம் பாரதியார் வீதி, திருநள்ளார் சாலை, மாதாக்கோவில் வீதி, காமராஜர் வீதி வழியாக சென்று, கிளிஞ்சல்மேடு கடலில் படகு மூலம் சிலைகள் கொண்டு செல்லப்பட்டு, விஜர்சனம் செய்யப்பட்டது.