உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேலமுந்தலில் விநாயகர் சிலை கடலில் கரைப்பு

மேலமுந்தலில் விநாயகர் சிலை கடலில் கரைப்பு

வாலிநோக்கம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மேலமுந்தலில் உள்ள விநாயகர் கோயிலில் 4 அடி உயரமுள்ள விநாயகர் சிலை வைக்கப்பட்டது. கிராம மக்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர். விசேஷ தீபாராதனைகளுக்குப் பிறகு நேற்று மாலை 5 மணி அளவில் மன்னார் வளைகுடா கடலில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது. சாயல்குடி போலீசார், வாலிநோக்கம் கடலோர குழும போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்தாண்டு சாயல்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 5 இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு, அமைதியான முறையில் கடல் மற்றும் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !