பவுர்ணமி பூஜை: அருணாசலேஸ்வரர் கோவிலில் வெளியே நின்று வழிபட்ட பக்தர்கள்
ADDED :1477 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமி நாளான இன்று கிரிவலம் செல்ல மற்றும் சுவாமி தரிசனத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையொட்டி, கோவில் ராஜகோபுரம் முன் வெளியே இருந்தபடி விளக்கு மற்றும் சூடம் ஏற்றி ஏராளமான பக்தர்கள் வழிபட்டு சென்றனர். தடையை மீறி சில பக்தர்கள் கிரிவலம் சென்றும் வழிபட்டனர்.