அமணலிங்கேஸ்வரர் கோவிலில் அமாவாசை வழிபாடு
ADDED :1482 days ago
உடுமலை : உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் மகாளய அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் பிரம்மா, சிவன், விஷ்ணு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடந்தது. கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லாததால் வாசலிலேயே நின்று பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.