உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்புடன் பேசுவோம்

அன்புடன் பேசுவோம்


புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய் சிறந்த நுால்களை எழுதியிருந்தபோதும், ஏழையாகவே வாழ்ந்தவர். ஒருமுறை வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிரில் ஒரு பிச்சைக்காரன் வந்து, ‘ஏதேனும் கொடுங்கள்’ என்று கேட்டான்.
தன் பையில் கையை விட்டு தேடிப்பார்த்து, எதுவும் கிடைக்காததால் அவனிடம், ‘சகோதரரே.. உனக்கு தருவதற்கு இப்போது என்னிடம் எதுவும் இல்லை’ என்று அன்பான வார்த்தைகளில் சொன்னார்.
அவரின் வார்த்தைகளில் நெகிழ்ந்த பிச்சைக்காரன், ‘என்னை மனிதனாக மதித்து, சகோதரர் என்று அன்புடன் அழைத்தீர்களே. அதுவே போதும்’ என்று சொல்லி விடைபெற்றான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !