திருச்செந்துார் கோயிலில் சுவாமி அம்பெய்தும் வேட்டை நிகழ்ச்சி
ADDED :1453 days ago
திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆண்டுதோறும் விஜயதசமியை முன்னிட்டு, சுவாமி அலைவாய் உகந்தப்பெருமான் வெள்ளிக் குதிரையில் எழுந்தருளி, பாளையங்கோட்டை சாலையில் உள்ள வேட்டை வெளி மண்டபத்தில், வேட்டைக்குச்சென்று விட்டு வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கமாகும். நிகழாண்டில் கொரோனா பொது முடக்கத்தால், இந்நிகழ்ச்சியானது கோயில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் வைத்து நேற்று பிற்பகலில் நடந்தது. இதனை முன்னிட்டு, கோயிலில் இருந்து சுவாமி அலைவாய் உகந்தப்பெருமான் , சிறிய கேடய சப்பரத்தில் எழுந்தருளி வசந்தமண்டபத்திற்கு வந்தார். அங்கு வைத்து, சுவாமி அலைவாய் உகந்தப் பெருமான் அம்பெய்து அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.