முத்து மாரியம்மன் கோயிலில் சூரனை வதம் செய்யும் நிகழ்வு
ADDED :1517 days ago
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு முத்து மாரியம்மன் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு ஒன்பது நாட்களும் கொலு வைக்கப்பட்டது. அம்மன் 9 நாட்டிலும் வெவ்வேறு அலங்காரங்களில் காட்சியளித்தார். விஜயதசமியை முன்னிட்டு நேற்று அம்மன் காளி அலங்காரத்தில் வில், சூலாயுதத்துடன் சூரனை வதம் செய்ய புறப்பட்டார். கோயில் முன்பாக வாழை மரத்தில் வடிவமைக்கப்பட்ட சூரனை வதம் செய்தார். கோயிலை வலம் வந்து மீண்டும் கோயிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். முன்னதாக பக்தர்கள் அம்மனை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜைகள், ஆராதனை நடந்தது.