உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கோவில்களில் புரட்டாசி கடைசி சனிக்கிழமை வழிபாடு

பெருமாள் கோவில்களில் புரட்டாசி கடைசி சனிக்கிழமை வழிபாடு

நத்தம், நத்தம் கோவில்பட்டி ருக்மணி சத்யபாமா சமேத வேணு ராஜகோபாலசுவாமி கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை. புரட்டாசி மாத கடைசி சனிகிழமை முன்னிட்டு நத்தம் பகுதியில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.  நத்தம் கோவில்பட்டி ருக்மணி சத்யபாமா சமேத வேணு ராஜகோபாலசுவாமி கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை யொட்டி சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வேணு ராஜகோபால சுவாமிக்கு பால், பன்னீர், தேன், இளநீர், சந்தனம் உள்ளிட்ட  சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பூக்களால் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நத்தம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !