உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூரில் மணவாள மாமுனிகள் திரு நட்சத்திர உற்ஸவம் துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் மணவாள மாமுனிகள் திரு நட்சத்திர உற்ஸவம் துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாளமாமுனிகள் சன்னதியில் திருநட்சத்திர உற்ஸவம் துவங்கியது.

இதனை முன்னிட்டு இன்று காலை 10:00 மணிக்கு மணவாளமாமுனிகள் சன்னதியில் சிறப்பு பூஜைகளை சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் செய்தார். பின்னர் நாலாயிர திவ்ய பிரபந்த சேவா காலம் நடந்தது. பக்தர்கள் பங்கேற்றனர். 10 நாட்கள் நடக்கும் இந்த உற்ஸவத்தில் நவம்பர் 8 அன்று திருநட்சத்திர உற்ஸவமும், ஆண்டாள், பெரிய பெருமாள், பெரியாழ்வார் மங்களாசாசனம், சாற்றுமுறை நடக்கிறது. நவம்பர் 9 முதல் பிள்ளைலோகாச்சாரியார் திருநட்சத்திர உற்ஸவமும் நடக்கிறது. ஏற்பாடுகளை சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !