திருப்பரங்குன்றத்தில் வெள்ளி பல்லக்கில் சுவாமி புறப்பாடு
ADDED :1463 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு உபயமாக வழங்கப்பட்ட வெள்ளி பல்லக்கில் சஷ்டி விழா துவக்கம் முதல் சுவாமி புறப்பாடு நடக்கிறது. இக்கோயிலில் சஷ்டி விழா நாட்களில் தினமும் மாலை தந்தத்தொட்டி விடையாத்தி சப்பரத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை புறப்பாடாகி, திருவாட்சி மண்டத்தை ஆறுமுறை வலம் சென்று அருள்பாலிப்பர். தற்போது சஷ்டி சுவாமி புறப்பாட்டிற்கு உபயதாரர்கள் 2 வெள்ளி பல்லக்கு வழங்கியுள்ளனர். அந்த வெள்ளி பல்லக்கு ஒன்றில் தினமும் சுவாமி புறப்பபாடு நடக்கிறது.