நாடு செழிக்க நந்தீஸ்வரருக்கு கோலாட்டம் நடத்திய பெண்கள்
ADDED :1510 days ago
சிவகங்கை : சிவகங்கை காசிவிஸ்வநாதர் கோயில் கந்த சஷ்டி விழாவில் நந்தீஸ்வரருக்கு கோலாட்டம் நடத்தி சிறப்பு பூஜை செய்து பெண்கள் வழிபட்டனர்.ஐப்பசியில் நல்ல மழை பெய்து நாடு செழிக்க வேண்டும் என்பதற்காக சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பெண்கள் நந்தீஸ்வரருக்கு வழிபாடு செய்து கோலாட்டம் நடத்தினர். இதில் சிறுவனை நந்தீஸ்வரனாக பாவித்து மாலை அணிவித்து சிறப்பு பூஜை செய்து வணங்கினர்.துர்காராம் என்பவர் தெரிவித்ததாவது: ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தில் மழை வேண்டி நந்தீஸ்வரருக்கு கோலாட்டம் நடத்தப்படும். இதில் அதிகளவில் பெண்கள் தற்போது பங்கேற்பதில்லை. பழங்காலத்தில் 9 நாள், 5 நாள் பெண்கள் நந்தீஸ்வரருக்கு கோலாட்டம் நடத்தி வணங்குவார்கள். அந்த பழமை தொடர வேண்டும் என்பதற்காக கோலாட்டம் நடத்தி நந்தீஸ்வரரை வணங்கி வருகிறோம், என்றார்.