மடக்கு யாத்திரை
ADDED :1455 days ago
ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு கிளம்பிச் சென்று மலையை அடையும் வரை உள்ள பயணத்தை ‛புனித யாத்திரை’ என்பர், மலையில் இருந்து வீடு திரும்பும் வரை உள்ள பயணத்தை ‘மடக்கு யாத்திரை’ என்பர். ‘மடக்கு’ என்றால் ‘ஒடுக்குதல்’. சபரிமலை ஐயப்பனிடம், நம் அகங்கார எண்ணங்களை ஒப்படைத்து, மமதையை ஒடுக்கிக் கொண்டு திரும்ப வேண்டும். மீண்டும் ‛நான்’ என்ற ஆணவம் தலைதுாக்காமல் சத்தியப்பிரமாணம் எடுத்து ஊர் திரும்ப வேண்டும். இதனால் தான் இதை ‘மடக்கு யாத்திரை’ என்கின்றனர்.