உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பசியால் வாடும் குழந்தைகள்

பசியால் வாடும் குழந்தைகள்


டேனியல் என்பவர் காலையில் பேரக்குழந்தைகளுடன் சாப்பிட்டிக் கொண்டிருந்தார். உணவு பிடிக்காததால் குழந்தைகள் சாப்பிடவில்லை.   
‘‘என் அன்பு செல்வங்களே. சுவையான உணவு எளிதாக கிடைப்பதால் இதன் அருமை உங்களுக்கு தெரியவில்லை. ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல், எத்தைனை பேர் கஷ்டப்படுகிறார்கள் தெரியுமா. பசியால் வாடும்போது அவர்களின் முகத்தை பார்த்திருக்கிறீர்களா...’’ என்று கேட்டார் டேனியல்.
அவர்களும் விளையாட்டாக ‘இல்லை’ என்று சிரி்த்தனர்.
இவர்களுக்கு பாடத்தை கற்பிக்க எண்ணியவர், ‘‘செல்வங்களே.. இன்று முழுவதும் நீங்கள் எதுவும் சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிடாமல் இருந்தால் உங்களுக்கு பிடித்த உணவை’’ தருவேன் என்றார்.
போட்டிக்கு குழந்தைகளும் ஒப்புக்கொண்டனர். காலைப்பொழுது விரைவாக ஓடியது. மதியம் வந்தது. பசி என்றால் என்னவென்று தெரியாத குழந்தைகளுக்கு பசி எடுக்க ஆரம்பித்தது. உடனே தாத்தாவிடம் ஓடினர்.
‘‘தாத்தா.. நாங்கள் போட்டியில் தோற்றுவிட்டோம்’’ என்று வருந்தினர்.
‘‘கவலைப்படாதீர்கள். இதோ உங்களுக்கு பிடித்தமான உணவு’’ என காலையில் கொடுத்த உணவையே தந்தார்.
அவர்களும் அதை வேகமாக சாப்பிட ஆரம்பித்தனர். பசி வந்தால் அனைத்தும் பறந்து போகும் என்பது உண்மைதானே! 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !