ஈஷா யோக மையத்தில் குருபவுர்ணமி விழா; தினமலர் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு!
ADDED :4894 days ago
பேரூர்: கோவை ஈஷா யோக மையத்தில், குரு பவுர்ணமி விழா, இன்று நடந்தது. கோவை அருகே, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையம் அமைந்துள்ளது. இங்கு, குருபவுர்ணமி விழா, சத்குரு ஜக்கிவாசுதேவ் முன்னிலையில் இன்று கொண்டாடப்பட்டது. முன்னதாக சிறப்பு பவுர்ணமி ஊர்வலமும், மஹாஆரத்தி நிகழ்ச்சியும் நடந்தது. குரு பவுர்ணமி, ஆதிகுருவை மகிமைப்படுத்தும் வகையில், பாரம்பரிய ஹடயோக பயிற்சி, அளிக்கப்பட்டது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இப்பயிற்சியில் பங்கேற்றனர். ஆதியோகி ஆலயத்தில் இப்பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. காலை 6.30 முதல் மதியம் 12.30 மணி வரை தியானலிங்கத்துக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. சத்குருவுடனான சத்சங்கம் நிகழ்ச்சி இரவு 9.00 முதல் தினமலர் இணையதளத்திலும், லைவ்.ஈஷா.கோ இணையதளத்திலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.