உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்துார் சிவன் கோயிலில் தாராஹோமம்

திருச்செந்துார் சிவன் கோயிலில் தாராஹோமம்

திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தில் மகாதேவ அஷ்டமியை முன்னிட்டு சி றப்பு பூஜைகள் நடந்தன. இதனை முன்னிட்டு கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜை நடந்தது. தொடர்ந்து காலை சுவாமிக்கும் அம்பாளுக்கு அபிஷேகம் நடந்தது. சிவன் சன்னதி முன்அமைக்கபட்டயாக சாலையில் சிறப்பு தாராஹோமமும், சிவபெருமானுக்கு காலை 8.30 மணிமுதல் 10.30 மணி வரை தாராபிஷேகமும் நடந்தது. இதனையடுத்து சுவாமிக்கு சிறப்பு மஹாஅபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மகாதேவ அஷ்டமி கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !