உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இலையில் அங்க பிரதட்சனம் செய்த பக்தர்கள்

இலையில் அங்க பிரதட்சனம் செய்த பக்தர்கள்

திருப்பரங்குன்றம்: வைக்கம் மகாதேவ அஷ்டமியை முன்னிட்டு திருப்பரங்குன்றம் ஆதி சொக்கநாதர் கோயிலில் சிவபெருமான், மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. சுவாமிக்கு நாகாபரணம், அம்மனுக்கு சந்தனகாப்பு சாத்துப்படியானது. மகாதேவ அஷ்டமி கமிட்டியினர் சார்பில் வேதசிவாகம பாடசாலை மாணவர்களால் சிறப்பு பூஜைகள் முடிந்து அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள், சாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம் செய்தனர். ஹார்விபட்டி பாலமுருகன் கோயிலில் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !