திருக்காமீஸ்வர் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை
வில்லியனுார் : வில்லியனுார் திருக்காமீஸ்வர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
வில்லியனுார் ஆனந்தம்மாள் சத்திரம் எதிரில் அமைந்துள்ள பழமைவாய்ந்த ஏகாம்பரநாத மகேசுவரர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, காலபைரவருக்கு நேற்று மாலை 4:30 மணியளவில் சிறப்பு யாகம், 6:00 மணிக்கு பூர்ணாஹூதி நடந்தது.இரவு 7:00 மணியளவில் கால பைரவருக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு மங்கள திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், 8:00 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை ஆலய குருக்கள் சரவண சிவாச்சாரியார் செய்தார்.வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.