ஜெருசலேம் செல்ல மானியம் உயர்வு
ADDED :1438 days ago
சென்னை : கிறிஸ்துவர்களின் புனித தலமான ஜெருசலேம் சென்று வர அருட்சகோதரிகள் மற்றும் கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் மானியம் 37 ஆயிரம் ரூபாயில் இருந்து 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஜெருசலேம் புனித பயணத்திற்கு அருட்சகோதரிகள் மற்றும் கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் மானியம் 36 ஆயிரம் ரூபாயில் இருந்து 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என சட்டசபையில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் அறிவித்தார். அதன்படி அருட்சகோதரிகள், கன்னியாஸ்திரிகள் ஜெருசலேம் செல்ல வழங்கப்படும் மானிய தொகையை 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.