கமலஹாசன் நலம் பெற வேண்டி கோயில்களில் பிரார்த்தனை
ADDED :1434 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மேற்கு மாவட்ட மக்கள் நீதி மையத்தின் சார்பில் அக்கட்சித் தலைவர் கமலஹாசன் நலம் பெற வேண்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், வைத்தியநாத சுவாமி கோயிலில் மாவட்ட செயலாளர் பாலாஜி தலைமையில் பிரார்த்தனை நடந்தது. கட்சி நிர்வாகிகள் செல்வி, செங்குட்டுவன், முனியாண்டி, சங்கரசுப்பு, மதுரைவீரன் பங்கேற்றனர்.