திருப்பரங்குன்றம் வீர ஆஞ்சநேயர் கோயிலில் வருஷாபிஷேகம்
ADDED :1406 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் வீர ஆஞ்சநேயர் கோயிலில் வருஷாபிஷேக உற்சவத்தை முன்னிட்டு மூலவர்கள் உற்சவர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பூஜைகள் முடிந்து ராஜாங்க திருக்கோலத்தில் சுவாமி அருள்பாலித்தனர். ஹார்விபட்டி ஸ்ரீ ஹரிஹர தர்மசாஸ்தா கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் முடிந்து மூலவருக்கு சிறப்பு அலங்காரம் ஆனது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.