உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் கோயிலில் சமயநூலகம் பயன்பாட்டுக்கு வந்தது

ஸ்ரீரங்கம் கோயிலில் சமயநூலகம் பயன்பாட்டுக்கு வந்தது

ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில், தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத்துறை சட்டமன்ற அறிவிப்பின்படி மேம்படுத்தப்பட்ட  சமயநூலகம் இன்று (8 ம்தேதி) புதன் கிழமை காலை 09.00 மணிக்கு கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து முன்னிலையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர் கு.கந்தசாமி, உள்துறை கண்காணிப்பாளர் மா.வேல்முருகன், உதவி கண்காணிப்பாளர் மோகன், மேலாளர் உமா ஆகியோர் பங்கு பெற்றனர். இந்நூலகத்தில் மிகப் பழமையான வைணவ நூல்கள் அதிகமாக உள்ளது. இந்நூலகமானது காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை செயல்படும். மதியம் 1.00 - 2.00 மணி வரை இடைவேளை  நேரம். செவ்வாய் கிழமை விடுமுறை. இந்நூலகத்திற்க்கு இந்து சமய நூல்களை நன்கொடையாக தர நன்கொடையாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !