உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜன.,12ல் ‛மோடி பொங்கல் விழா: மதுரை வருகிறார் பிரதமர்

ஜன.,12ல் ‛மோடி பொங்கல் விழா: மதுரை வருகிறார் பிரதமர்

மதுரை: மதுரையில் பாஜ., சார்பில் ஜன.,12ம் தேதி நடைபெறும் பொங்கல் திருவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழக பா.ஜ., சார்பில் ‛மோடி பொங்கல் நிகழ்ச்சி வரும் ஜன.,12ம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது.  இந்நிகழ்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். இந்நிகழ்ச்சியினை ஒருங்கிணைந்து சிறப்பான முறையில் நடத்துவதற்கு மாநில பொது செயலாளர் கரு.நாகராஜன் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !