தஞ்சையில் ரூ.500 கோடி மதிப்பிலான மரகத லிங்கம் மீட்பு
ADDED :1387 days ago
சென்னை: தஞ்சாவூரில் வங்கி லாக்கரில் இருந்த ரூ.500 கோடி மதிப்பிலான மரகத லிங்கத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் மீட்டுள்ளனர்.
தஞ்சாவூரில் வங்கி லாக்கரில் இருந்த ரூ.500 கோடி மதிப்பிலான பச்சை மரகத லிங்கத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் மீட்டுள்ளனர். இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய்குமார் சிங் கூறியதாவது: தஞ்சை அருளானந்தநகர் சாமியப்பன் என்பவரது வங்கி லாக்கரில் இருந்த மரகத லிங்கம் மீட்கப்பட்டுள்ளது. எவ்வித ஆவணங்களும் இல்லாததால் பச்சை மரகத லிங்கம் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு, ரூ.500 கோடியாகும். மீட்கப்பட்ட சிலை 2016ல் நாகை திருக்குவளையில் உள்ள கோயிலில் காணாமல் போனது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சாமியப்பனுக்கு எப்படி மரகத லிங்கம் கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.