உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி சண்முக நதி கரையில் தை அமாவாசை தர்ப்பணம்

பழநி சண்முக நதி கரையில் தை அமாவாசை தர்ப்பணம்

பழநி: பழநி சண்முக நதி கரையில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பழநி சண்முக நதியில் மாதந்தோறும் அமாவாசை திதியில் பிதுர்களுக்கு தர்ப்பணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது பொதுவாக தை, புரட்டாசி, ஆடி மாத அமாவாசைகளில் வீடுகளில் இறந்த முன்னோர்களுக்கு தர்பணம் வழங்குவது வழக்கம் அதன்படி நேற்று தை அமாவாசையை முன்னிட்டு பிதுர்களுக்கு திதி கொடுத்தனர். இவ்வாறு திதி கொடுப்பதால் குடும்பத்தில் நிம்மதி, அனைத்து வளங்களும் பெறலாம் என்ற நம்பிக்கை உள்ளது. பரம்பரை பரம்பரையாக முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் பழக்கம் நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !