உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவகைலாய கோயிலில் அறுபத்து மூவர் சந்நிதி திருப்பணி

நவகைலாய கோயிலில் அறுபத்து மூவர் சந்நிதி திருப்பணி

நவகைலாயத் தலங்களில்  எட்டாவது தலமாக விளங்குவது ராஜபதி கைலாசநாதர் கோயில். நவக்கிரகங்களில் கேதுவுக்குரியது. திருச்செந்தூரில் இருந்து ஏரல் செல்லும் வழியில் உள்ளது. சவுந்தர்ய நாயகி சமேதராக சிவன் இங்கு அருள்பாலிக்கிறார். 400 ஆண்டுகளுக்கு முன், தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளத்தில் இத்தலம் அழிந்து போனது. புதிய கோயில் நிர்மாணிக்கப்பட்டு 2010ல் கும்பாபிஷேகம் நடந்தது. கூனம்பட்டி கல்யாணபதி ஆதீனத்தின் சீடர்களால் நடத்தப்படும் கைலாஷ் டிரஸ்ட் கோவில்பட்டியில் இயங்கி வருகிறது. மாணிக்கவாசகர் மடாலயத்தில் தீட்சை பெற்ற இவர்கள், திருநாவுக்கரசரைப் பின்பற்றி ஒவ்வொரு கடைசி ஞாயிறும் சிவன் கோயில்களில் உழவாரப் பணி செய்கின்றனர். திருவாரூர், சிதம்பரம், திருவாலங்காடு உள்ளிட்ட 400 கோயில்களைச் சுத்தம் செய்துள்ளனர். டிரஸ்ட் சார்பில் ராஜபதி கைலாசநாதர் கோயிலில் அறுபத்துமூவர் சந்நிதி  அமைக்கும் திருப்பணி தொடங்கப்பட்டுள்ளது.  ஒரு நாயன்மார் சிலையை அமைக்க நபர் ஒருவருக்கு ரூ10,001 நன்கொடைவழங்கலாம். டிரஸ்ட் தலைவர் பாலசுப்பிர மணியனைத் தொடர்புகொள்ள போன்: 98422 63681.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !