பழநி முருகன் கோயிலுக்கு வால்பாறையில் இருந்து பறவைக்காவடி
ADDED :1355 days ago
பழநி: பழநி முருகன் கோயிலுக்கு கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து வந்தனர். பழநி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா நிறைவு பெற்ற பிறகும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக காவடி எடுத்து வருகை புரிகின்றனர். இந்நிலையில் நேற்று கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். பழநி சண்முக நதி அருகே ராட்சத கிரேனில் பறவைக்காவடி எடுத்து 15 அடி நீளமுள்ள அலகு குத்தி, கத்திகளால் அலகு குத்தி பழநி மலைக்கோயில் கிரி வீதியில் வலம் வந்தனர். கடந்த 40 ஆண்டுகளாக பால்காவடி தீர்த்த காவடி மயில் காவடி எடுத்து வருகின்றனர். அலகு குத்தி வந்தவர்களிடம் பெண்கள் தங்கள் குழந்தையை கொடுத்தனர். நேத்திக்கு இடம்பிடித்து மலைக் கோயிலில் தரிசனம் செய்து திரும்பினார்.