உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்று மகா சிவராத்திரி: சிவனருளால் நினைத்தது நிறைவேற இதை படிங்க..!

இன்று மகா சிவராத்திரி: சிவனருளால் நினைத்தது நிறைவேற இதை படிங்க..!

* உலகாளும் சிவபொமானே, காதுகளுக்கு அமிர்தமான நமசிவாய என்றும் திருநாமம் கொண்டவனே! சந்திரனை தலையில் சூடியவனே! கற்பூரம் போல்பிரகாசிப்பவனே! ஜடை தரித்தவனே!, பால் போன்ற வெண்ணீற்றை பூசியவனே! பிறவிக்கடல தாண்டச்செய்பவனே! எங்களுக்கு செல்வ வளம் தருவாயாக

* பார்வதி பிரியனே! பாம்பைக் கழுத்தில் சூடியவனே! கங்கையைத் தலை மேல் கொண்டவனே! பக்தர் மீது அன்பு கொண்டவனே! பயத்தைப் போக்குபவனே! மங்களகரமாக்குவாயாக.

*ஜோதியாய் ஒளிர்பவனே! சிவநாமம் செல்வோரைக் காப்பவனே!, எதிரிகிளின் எதிரியே! நெற்றிக்கண் கொண்டவனே! காதுகளில் ரத்தின குண்டலம் அணிந்தவனே! எஙகள் நெஞ்சத்தில் குடியிருக்க வருவாயாக.

* ஐந்து முகம் கொண்டவனே! தங்கமயமான புலித்தோல் உடுத்தியவனே! மூவுலகுக்கும் அதிபதியே! சம்சார சாகரத்தில் தவிக்கும் பக்தர்களை கரை சேர்ப்பவனே பிறவிக்கடலில் இருந்து மீட்பவனே ! பிரம்மனால் பூஜிக்கப்பட்டவனே! உன்னை என்றும் மறவாத மனதைத்தருவாயாக.

* மங்கள லட்சணம் .உடையவனே! மனக்கவலையை தீர்ப்பவனே! பூதகணங்களின் தலைவனே! சங்கீதத்தில் விருப்பம் கொண்டவனே! சிறந்த காளையை வாகனமாகக் கொண்டவனே! யானைத்தோல் போர்த்தியவனே! மகேஸ்வரனே! எங்கள் நாடும், வீடும் நலமுடன் திகழ அருள்புரிவாயாக.

* புண்ணியம் செய்தவர்களுக்கு அருளைப் பொழிவனே! சூலாயுதம் கொண்டவனே! மானும், மழு எண்னும் கோடாரியும் ஏந்தியவனே! சிவந்த நிறம் கொண்டவனே! சூரியனுக்கும் பிரியமானவனே! எங்களுக்கு தீர்காயுளையும், ஆரோக்கியத்தையும் தந்தருள்வாயாக.

* தேவர்களின் தெய்வமே! மகாதேவனே! விரும்பிய பொருட்களைத் தருபவனே! கவுரியுடனும், மகாகணபதியுடனும், காட்சி அளிப்பவனே! வேல் முருகனின் தந்தையே! மகனிடம் உபதேசம் பெற்ற மாணவனே!, எங்களுக்கு கல்வியறிவு , சிறந்த பணி நற்புகழை தந்தருள்வாயாக.

*திரிபுர சம்ஹாரம் செய்தவனே! அகத்தியரை பொதிகைக்கு அனுப்பியவனே! வாக்குக்கு எட்டாத பெருமை உடையவனே! நாட்டியக்கலையின் நாயகனே! எங்கள் மனதிலுள்ள தற்பெருமை, ஆணவம், அகம்பாவம் ஆகிய தீய குணங்களை நீக்குவாயாக.

*கிரகங்களால் ஏற்படும் சிரமத்தை போக்குபவனே! சிவசிவ என சொல்வோரின் தீவினையை போக்குபவனே! சிந்தனைக்கு எட்டாதவனே! உலகாளும் பரம்பொருளே! சங்கரனே! எங்கிருந்தாலும் எங்களுடன் இருந்து பாதுகாப்பாயாக.

*இன்பத்தின் எல்லையே! இகபர சுகமே! உலக பாரத்தை தாங்குபனே! பவங்களைத் தீர்ப்பவனே! பூலோகத்துக்கும், வானுலகத்துக்கும் நெருப்பாக உயர்ந்து நின்றவனே! அண்ணாமலையாய் திகழ்பவனே! கைலாய நாதனே! மனநிறைவையும் நிம்மதியையும் தந்தருள் வாயாக.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !