சதுரகிரியில் மகா சிவராத்திரி வழிபாடு: பக்தர்கள் குவிந்தனர்
ADDED :1354 days ago
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் மகா சிவராத்திரி வழிபாடு சிறப்புடன் நடைபெற்று வருகிறது. ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
இன்று சிவராத்திரி வழிபாட்டை முன்னிட்டு இரவு 8 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை நான்கு கால மகா சிவராத்திரி சிறப்பு பூஜைகள் நடக்க உள்ளது. இதனை முன்னிட்டு அதிகாலை முதல் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் பக்தர்கள் குவிந்திருந்தனர். காலை 6:30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டனர். கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாதன், கோவில் அலுவலர்கள் செய்துள்ளனர்.