அய்யா வைகுண்டர் சுவாமி அவதார தினம்
ADDED :1396 days ago
பொள்ளாச்சி: மாக்கினாம்பட்டி கந்தவேல் நகரில் ஸ்ரீமன் நாராயணசுவாமி கோவிலில், அய்யா வைகுண்டர் சுவாமி அவதார தின விழா கொடியேற்றத்துடன் நேற்றுமுன்தினம் துவங்கியது.சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது. நள்ளிரவில் அலங்கார பூஜை, பணிவிடை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, வைகுண்டர் அவதார நாளான நேற்று அதிகாலையில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.மதியம், 12:00 மணிக்கு சுவாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வாழை, ஆப்பிள், ஆரஞ்ச், மாதுளை உள்ளிட்ட பல்வேறு வகையான கனிகள் படைத்து சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சிறப்பு அலங்கார பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது. பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.