உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் குருநாத சுவாமி கோவிலில் பாரி வேட்டை

திருப்பரங்குன்றம் குருநாத சுவாமி கோவிலில் பாரி வேட்டை

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமி கோயிலில் பரிவேட்டை திருவிழா நடந்தது.

சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எழுந்தருளியுள்ள உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மன் மஹா சிவராத்திரியன்று குருநாத சுவாமி கோயிலில் எழுந்தருளினார். தினம் அபிஷேகம், பூஜை நடந்தது. நேற்று இரவு குருநாத சுவாமி கோமிலில் எழுந்தருளியுள்ள பேச்சியம்மன், ராக்காயி அம்மன், பெரிய கருப்பண சுவாமி, சங்கிலி கருப்பண சுவாமி, அக்னி வீரபத்திரன் சுவாமி, இருளப்ப சுவாமி மற்றும் 21 பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. கோயில் பூசாரிகள் கிரிவலப்பாதையில் உள்ள காட்டு பேச்சியம்மன் இருப்பிடம் சென்று வேட்டை சாத்துப்படி செய்து பூஜை நடத்தினர். இரவு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்ட பூச்சரத்தில் அங்காளபரமேஸ்வரி புறப்பாடாகி காட்டு பேச்சியம்மன் இருப்பிடம் சென்று பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !