திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயிலில் பங்குனி கொடியேற்றம்
ADDED :1343 days ago
திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர்-சவுந்தர நாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 10:45 மணிக்கு கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின் கொடியேற்ற வைபவம் தொடங்கியது. கொடியேற்ற வைபவத்திற்கு பின் மரத்திற்கு பிரம்மாண்ட மாலைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின் அம்மனும் சுவாமியும் கோயில் வளாகத்தில் பல்லக்கில் வலம் வந்தனர். பக்தர்களுக்கு பூந்தி, லட்டு வழங்கப்பட்டது. 16ம் தேதி காலை 11 மணிக்கு திருக்கல்யாணமும், 17ம் தேதி காலை ஒன்பது மணிக்கு தேரோட்டமும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர். தினசரி பல்வேறு வாகனங்களில் அம்மனும், சுவாமியும் வீதி உலா வர உள்ளனர்.