உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடகம் : ராகு, கேது பெயர்ச்சி பலன்.. புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்

கடகம் : ராகு, கேது பெயர்ச்சி பலன்.. புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்

புனர்பூசம் 4-ம் பாதம்: பெண்களால் பிரச்னை

இந்த ராகு, கேது பெயர்ச்சி சுமாரான பலனைத் தரும். இதுவரை 11ம் இடமான ரிஷப ராசியில் இருந்து பொருளாதார வளம், பெண்களால் அனுகூலத்தைக் கொடுத்து வந்த ராகு 10ம் இடமான மேஷத்திற்கு மாறுகிறார். இது அவ்வளவு சிறப்பான இடம் அல்ல. இங்கு பொருள் இழப்பையும், உடல் உபாதைகளையும் கொடுப்பார். சிலர் பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். பெண்கள் வகையில் இடையூறுகள் வரலாம்.


கேது இதுவரை விருச்சிக ராசியில் அதாவது 5ம் இடத்தில் இருந்தார். அங்கு இருந்த அவர் உடல்நலப் பாதிப்பையும், பிள்ளைகளால் பிரச்னையையும் ஏற்படுத்தி இருக்கலாம். இப்போது கேது 4ம் இடமான துலாம் ராசிக்கு வருகிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. அவரால் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். உடல் நலம் பாதிப்பு வரலாம். வயிறு பிரச்னை வரும்.
 இரண்டு கிரகங்களுமே சாதகமற்ற இடத்தில் இருக்கிறார்கள் என்று கவலைப்படத் தேவை இல்லை காரணம் கேதுவின் பின்னோக்கிய 11ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 6இடமான தனுசு ராசியில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதன் மூலம் எந்த பிரச்னையையும் முறியடிக்கும் வல்லமை பெறலாம். அபார ஆற்றல் பிறக்கும். பொருளாதார வளம் அதிகரிக்கும். எதிரிகளின் இடையூறை முறியடிப்பீர்கள். ஆடை, ஆபரணம் வாங்கலாம்.

இனி விரிவான நட்சத்திர பலனை காணலாம்


பொதுபலன்:                  
நினைத்ததை நிறைவேற்ற சற்று முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். பணப்புழக்கம் சீராக இருக்கும். அதே நேரம் திடீர் செலவுகள் வரும். குடும்பத்தில் குருவால் நன்மைகள் அதிகரிக்கும். மக்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும்.   வீடு, மனை வாங்கலாம். சுப நிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும். கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். 2023 ஏப். 22க்கு பிறகு  திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தடைபடலாம். புதிய வீடு வாகனம் வாங்க யோகம் இல்லை. உறவினர்கள் வகையில் அனுகூலம் இருக்காது.

தொழில்: அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது அரிது. அதோடு சிலர் அரசின் மூலம் பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம். எனவே உங்கள் வரவு, செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும். குரு பகவானால் சீரான லாபம் கிடைக்கும். சிலர் தொழில் விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும்.
 
பணியாளர்கள்: குருவால் புதிய பதவியையும், சம்பள உயர்வையும் காணலாம். 2023 ஏப்.22க்கு பிறகு கடந்த காலம் போல் அனுகூலமாக இருக்காது. வேலைப்பளு அதிகரிக்கும். அலைச்சல் இருக்கும். சம்பள உயர்வுக்கு தடையிருக்காது. உங்களுக்கு வர வேண்டிய பொறுப்பு தட்டி பறிக்கப்படலாம். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலர் வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு தற்காலிகமாக பிரிய வேண்டியதிருக்கும்.

கலைஞர்கள்: புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். சக கலைஞர்களின் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.
அரசியல்வாதிகள்: புகழ், பாராட்டு கிடைக்கப் பெறுவர். தொண்டர்கள் வகையில் செலவு ஏற்படலாம்.  
அரசியல்வாதிகள்: அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். சிலர் வீண் அலைச்சலுக்கு ஆளாகலாம்.
மாணவர்கள்: ஆசிரியர்களின் அறிவுரை பயன் கொடுக்கும். உழைப்புக்கு தகுந்த மதிப்பெண்கள் கிடைக்கும். 2023 ஏப். 22க்கு பிறகு விடாமுயற்சி தேவைப்படும்.
விவசாயிகள்: உழைப்புக்கு ஏற்ற பலனைத்தான் பெற முடியும்.  அதிக முதலீடு எதிலும் செய்ய வேண்டாம். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த பலனை பெற இயலாது.  வழக்கு விவகாரங்களில் சிக்க வேண்டாம்
பெண்கள்: குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். ஆடம்பரத்தைத் தவிர்க்கவும். தேவைகளை குறைத்துக் கொள்ளவும். கணவரின் அன்பும் பிள்ளைகளால் பெருமையும் கிடைக்கும்.  சகோதரர்கள் உறுதுணையாக இருப்பர். சுயதொழில் செய்யும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். 2023 ஏப். 22 க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பளுவும் அலைச்சலும் ஏற்படும். சிலர் இடமாற்றத்தை சந்திக்கலாம்.
உடல்நலம்: கேதுவால் உடல்நலக்குறைவு அவ்வப்போது வரலாம். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.
பரிகாரம்: விநாயகர் வழிபாடு முன்னேற்றம் தரும். ஆதரவற்ற முதாட்டிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.  பவுர்ணமி நாளில் வீட்டில் விளக்கு ஏற்றி சித்திரபுத்திர நயினாரை வணங்கி ஏழைகளுக்கு உதவுங்கள். பத்திரகாளியம்மனுக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றுங்கள்.

பூசம்: உடல்நலம் பாதிப்பு

இந்த ராகு, கேது பெயர்ச்சி சுமாரான பலனைத் தரும். இதுவரை 11ம் இடமான ரிஷப ராசியில் இருந்து பொருளாதார வளம், பெண்களால் அனுகூலத்தைக் கொடுத்து வந்த ராகு 10ம் இடமான மேஷத்திற்கு மாறுகிறார். இது அவ்வளவு சிறப்பான இடம் அல்ல. இங்கு பொருள் இழப்பையும், உடல் உபாதைகளையும் கொடுப்பார். சிலர் பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். பெண்கள் வகையில் இடையூறுகள் வரலாம்.


கேது இதுவரை விருச்சிக ராசியில் அதாவது 5ம் இடத்தில் இருந்தார். அங்கு இருந்த அவர் உடல்நலப் பாதிப்பையும், பிள்ளைகளால் பிரச்னையையும் ஏற்படுத்தி இருக்கலாம். இப்போது கேது 4ம் இடமான துலாம் ராசிக்கு வருகிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. அவரால் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகலாம். உடல் நலம் பாதிப்பு வரலாம். வயிறு பிரச்னை வரும்.
 இரண்டு கிரகங்களுமே சாதகமற்ற இடத்தில் இருக்கிறார்கள் என்று கவலைப்படத் தேவை இல்லை காரணம் கேதுவின் பின்னோக்கிய 11ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 6ம் இடமான தனுசு ராசியில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதன் மூலம் எந்த பிரச்னையையும் முறியடிக்கும் வல்லமை பெறலாம். அபார ஆற்றல் பிறக்கும். பொருளாதார வளம் பெருகும். எதிரிகளின் இடையூறை முறியடிப்பீர்கள். ஆடை, ஆபரணம் வாங்கலாம்.

இனி விரிவான நட்சத்திர பலனை காணலாம்


பொதுபலன்:

 ராகு,கேது சாதகமற்ற பலனை தந்தாலும் குருபகவான் குடும்பத்தில் குதுாகலத்தைக் கொடுப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதனால் வாழ்க்கையில் வளம் காணலாம். சகோதரிகளால் பண உதவி கிடைக்கும். மதிப்பு, மரியாதை இருக்கும். அனாவசிய செலவைத் தவிர்ப்பது நல்லது.  2023 ஏப். 22க்கு பிறகு மதிப்பு, மரியாதை முன்பு போல் இருக்காது என்றாலும் உங்கள் கவுரவத்திற்கு பங்கம் வராது. வீண்விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.


தொழில்: மறைமுக எதிரிகளால் பிரச்னை ஏற்பட்டாலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலை உண்டாகாது. அதிக முதலீடு செய்ய வேண்டாம். தொழில் ரீதியாக அடிக்கடி வெளியூர் பயணம் ஏற்படலாம். சிலர் தீயோர் சேர்க்கையால் பணஇழப்பை சந்திக்கலாம். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக வருமானத்தைப் பெறுவர். 2023 ஏப். 22க்கு பிறகு பணவிஷயத்தில் யாரையும் நம்பி விட வேண்டாம்.

பணியாளர்கள்: வேலையில் திருப்தியும், நிம்மதியும் காண்பீர்கள். கோரிக்கைகள் நிறைவேறும். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். 2023 ஏப்.22க்கு பிறகு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் உழைப்புக்கேற்ற வருமானம் இருக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். முக்கிய பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.

கலைஞர்கள்: புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசு வகையில் பரிசு, பாராட்டு கிடைக்கப் பெறுவர்.
அரசியல்வாதிகள்: பின்தங்கிய நிலையில் இருந்து விடுபடுவர். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும்.
 மாணவர்கள்:  ஆசிரியர்களின் ஆலோசனையால் பயனடைவர். நற்பெயர் கிடைக்கும் வகையில் படிப்பர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர்.
 விவசாயிகள்:  அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த பலனை பெற இயலாது.  வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்
பெண்கள்:  குடும்பத்தில் முக்கிய அங்கம் வகிப்பர்.அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதியும் திருப்தியும் கிடைக்கும். சுயதொழிலில் ஈடுபடும் பெண்கள் நல்ல முன்னேற்றம் அடைவர். 2023 ஏப்.22க்கு பிறகு கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்காது. சிறு பிரச்சினை வந்து மறையும். விட்டுக் கொடுத்து போகவும்.
உடல்நலம்: உடல்நலனில்  அக்கறை காட்ட வேண்டியதிருக்கும். பயணத்தின் போது கவனம் தேவை.
பரிகாரம்:  பெருமாள் கோயிலுக்கு வாரம் ஒருமுறை செல்லுங்கள். சாப்பிடும் முன்பு காக்கைக்கு அன்னமிடுங்கள்.  ஏழைகளுக்கு கொள்ளு தானம் செய்யலாம். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். ராகுவுக்கு நீல நிறவஸ்திரத்தை சாத்தி அர்ச்சனை செய்யுங்கள்.

ஆயில்யம்: நிதானம் அவசியம்

இந்த ராகு, கேது பெயர்ச்சி சுமாரான பலனைத் தரும். இதுவரை 11ம் இடமான ரிஷப ராசியில் இருந்து பொருளாதார வளம், பெண்களால் அனுகூலத்தைக் கொடுத்து வந்த ராகு 10ம் இடமான மேஷத்திற்கு மாறுகிறார். இது அவ்வளவு சிறப்பான இடம் அல்ல. இங்கு பொருள் இழப்பையும், உடல் உபாதைகளையும் கொடுப்பார். சிலர் பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். பெண்கள் வகையில் இடையூறுகள் வரலாம். எதிலும் நிதானம் தேவை.
கேது இதுவரை விருச்சிக ராசியில் அதாவது 5ம் இடத்தில் இருந்தார். அங்கு இருந்த அவர் உடல்நலப் பாதிப்பையும், பிள்ளைகளால் பிரச்னையையும் ஏற்படுத்தி இருக்கலாம். இப்போது கேது 4ம் இடமான துலாம் ராசிக்கு வருகிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. அவரால் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். உடல் நலம் பாதிப்பு வரலாம். வயிறு பிரச்னை வரும்.
 இரண்டு கிரகங்களுமே சாதகமற்ற இடத்தில் இருக்கிறார்கள் என்று கவலைப்படத் தேவை இல்லை காரணம் கேதுவின் பின்னோக்கிய 11ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 6ம் இடமான தனுசு ராசியில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதன் மூலம் எந்த பிரச்னையையும் முறியடிக்கும் வல்லமை பெறலாம். அபார ஆற்றல் பிறக்கும். பொருளாதார வளம் அதிகரிக்கும். எதிரிகளின் இடையூறை முறியடிப்பீர்கள். ஆடை, ஆபரணம் வாங்கலாம்.
இனி விரிவான நட்சத்திர பலனை காணலாம்

பொதுபலன்: எதையும் தீவிர முயற்சி எடுத்தால் தான் அது வெற்றிகரமாக முடியும். பண வரவு இருக்கும். குருவால் பொன்னும், பொருளும் தாராளமாக கிடைக்கும். 2023 ஏப். 22க்கு பிறகு வீட்டில்  பிரச்னை வரலாம். கணவன், மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். பொருள் இழப்பு ஏற்படலாம்.  உறவினர் வகையில் கருத்து வேறுபாடு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.
தொழில்:  கடின உழைப்புக்கு ஈடு இல்லை. அது இன்று இல்லாவிட்டாலும் என்றாவது பலனைக் கொடுக்கும். அதை மனதில் கொண்டு உழையுங்கள். ஆனாலும் தற்போது ஓரளவு வருமானம் இருக்கத்தான் செய்யும். புதிய தொழில் தொடங்க தேவைக்கும் அதிக முதலீடு போட வேண்டாம்.

பணியாளர்கள்: குருவால் உயர்வு காண்பர். கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும்.  2023 ஏப்.22க்கு பிறகு அதிக பளுவை சுமக்க வேண்டியது இருக்கும். மேலதிகாரிகளுடன்அனுசரித்து போகவும். சிலருக்கு வேலை மீது வெறுப்பு வரலாம். உங்கள் பொறுப்புகளை நீங்களே செய்யவும். சக ஊழியர்களிடம் வீண்விரோதம் ஏற்படலாம்.  இருப்பினும் குருவின் 5ம் இடத்துப் பார்வை சிறப்பாக உள்ளதால் எந்த பிரச்யையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம்.

கலைஞர்கள்: சிறப்பான நிலையை எட்டிப் பிடிப்பர். விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: அதிக சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும். காரியத்தடை, பொருள் நஷ்டம் ஏற்படலாம்.
மாணவர்கள்:  போட்டி பந்தயங்ளில் வெற்றி காண்பர். ஆசிரியர்களின் ஆலோனையை ஏற்று நடந்தால் முன்னேற்றம் கிடைக்கும். 2023 ஏப்.22 க்கு பிறகு கூடுதல் முயற்சி எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். சிலர் மன உளைச்சலுடன் காணப்படுவர். சிலர் தீய மாணவர்களோடு சேர்ந்து கெட்டப் பெயர் எடுக்க வாய்ப்புண்டு.  பெற்றோர்கள் கவனமாக இருக்கவும்.
விவசாயிகள்:  போதிய வருவாயைக் காணலாம். அதிக செலவு பிடிக்கும் பயிரை தவிர்க்கவும். மானாவாரி பயிர்களில் விளைச்சல் அதிகரிக்கும்.  வழக்கு விவகாரத்தில் முடிவு  சுமாராக இருக்கும்.
பெண்கள்:  உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். சுபநிகழ்ச்சிகள் கைகூடும். தேவைகளை பூர்த்தி செய்து கொள்வர். புத்தாடை அணிகலன் -கள் வாங்கலாம். 2023 ஏப்ரல் 22க்கு பிறகு வெளியில் பலவேறு விஷயங்களில் பெருமையாக பேசப்பட்டாலும் வீட்டில் விட்டுக்கொடுத்து போவது நல்லது. இல்லையென்றால் வீண்மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலைச்சலும். வேலைப்பளுவும் இருக்கும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. முக்கிய கோரிக்கைகளை காலம் நேரம் பார்த்து வைக்கவும்.
பரிகாரம்: சந்தர்ப்பம் கிடைக்கும் போது நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். சனிக்கிழமை சனிபகவானுக்கும் அர்ச்சனை செய்யுங்கள். ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.  ராகு காலத்தில் துர்க்கை,  பைரவருக்கு பூஜை செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !