உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராகு,கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை

ராகு,கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை

சோழவந்தான்:  சோழவந்தான் அருகே மேலக்காலில் மலையாண்டி அய்யனார், கணவாய் கருப்பண சுவாமி கோயில் உள்ளது. இங்கு ராகு,கேது பெயர்ச்சியையொட்டி யாகசாலை சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று மாலை 3.13க்கு ராகு ரிஷபத்திலிருந்து மேஷ ராசிக்கும், கேது விருச்சிகத்திலிருந்து துலாம் ராசிக்கும் பெயர்ச்சியாகினர். ராகு, கேது சுவாமிகளுக்கு தீபாராதனை, 11 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் பக்தர்கள், திருப்பணி குழுவினர் செய்தனர். சோழவந்தான் பிரளயநாதர் சிவன் கோயிலில் சிறப்பு ஹோமம், பரிகார ராசிகளுக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடந்தது. ஏற்பாடுகளை தக்கார் இளமதி, தொழிலதிபர் மணி, கவுன்சிலர் மருதுபாண்டியன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !