உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலகம் போற்றும் உத்தமன்

உலகம் போற்றும் உத்தமன்


குழந்தை பிறப்பதற்காக நேரத்தை தள்ளி வைப்பது, குறிப்பிட்ட நட்சத்திரத்தில் ஆபரேஷன் செய்து பிரசவிப்பது என்பது இப்போது தான் என நினைக்காதீர்கள். புராண காலத்திலேயே இப்படி சம்பவம் நடந்திருக்கிறது.
சோழ மன்னரான சுபதேவர் தமிழகத்தை ஆட்சி செய்து வந்தார். இவரது மனைவி கமலவதி. இந்த அம்மையாருக்கு பிரசவ வலி ஏற்பட்டு துடித்துக் கொண்டிருந்தார். அப்போது அரண்மனை ஜோதிடர்கள், “அம்மா! உங்களுக்கு இன்னும் சில நிமிடங்களில் குழந்தை பிறந்து விடும். நீங்கள் ஒரு நாழிகை (24 நிமிடம்) வலியைப் பொறுத்து, குழந்தை பிறக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்போது நல்ல நேரம் பிறக்கிறது. அதில் குழந்தை பிறந்தால் உலகம் போற்றும் உத்தமனாக இருப்பான்” என்றனர்.
பிரசவ வேதனையில் இருந்த கமலவதி எழுந்தாள். கயிறை எடுத்து வரச் சொல்லி தன்னை தலைகீழாக ஒரு நாழிகை வரை உத்திரத்தில் தொங்க விடச் சொன்னாள். அப்படியே செய்தனர். தலைகீழாக தொங்கிய அந்த பெண்ணை நல்ல நேரம் தொடங்கியதும் அவிழ்த்தனர். அவளுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
அந்தக் குழந்தை தான் சிவபக்தரான கோச்செங்கட்சோழ நாயனார். நாயன்மார்கள் அறுபத்து மூவரில் இவரும் ஒருவர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !