சிரித்து வாழ வேண்டும்
என்கிறார் வேதாத்ரி
* சிரித்த முகத்துடன் இரு. அதுவே உன் வாழ்க்கையை அழகாகக்கும்.
* ஆசைகளை அடியோடு ஒழிக்க முடியாது. அதை சீர்படுத்து. ஆனந்த வாழ்வு உன் வசமாகும்.
* நல்ல மனம், சத்தான உணவு, அளவான உழைப்பு, முறையான ஓய்வு இருந்தால் உடல்நலத்துடன் வாழலாம்.
* பிறர் மீது கோபம் கொள்ளும் போது, அந்தக் குறை உன்னிடம் உள்ளதா என்று கவனி.
* எங்கு தேடினாலும் அமைதி கிடைக்காது. ஏனென்றால் அது உன் மனதில்தான் உள்ளது.
* எதிலும் அளவறிந்து வாழப் பழகு. பிரச்னையே ஏற்படாது.
* எந்தச் சூழ்நிலையிலும் உனக்கு கோபம் வராவிட்டால், நீ ஞானம் அடைந்துவிட்டாய்.
* இயற்கைக்கு எப்போதும் மதிப்பு கொடு. நீதி, நியாயத்தை பின்பற்று.
* கேள்விப்படுகிற எல்லா விஷயத்தையும் நம்பி விடாதே.
* லட்சியத்தில் உறுதி இருந்தால் நீ எண்ணியதெல்லாம் நடக்கும்.
* எல்லோரிடமும் எல்லா விஷயத்தையும் சொல்லாதே.
* நீ சொன்னதுதான் சரி என பிறரிடம் வாதம் செய்யாதே.
* சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துதான் ஆக வேண்டும் என்பதை உணர்ந்துகொள்.