உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கரு உருவாவதை சிற்பமாக கொண்ட கோயில்: சிதிலமடைந்துள்ளது

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கரு உருவாவதை சிற்பமாக கொண்ட கோயில்: சிதிலமடைந்துள்ளது

அலங்காநல்லுரர்: மதுரை மாவட்டம் அலங்காநல்லுரர் அடுத்த சின்னஇலந்தைகுளம் கோவிலுரரில் பிற்கால பாண்டியர்கால கோயில் சிதிலமடைந்துள்ளது. இப்பகுதியில் மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுரரி வரலாற்று உதவிப் பேராசிரியர்கள் ராஜகோபால், பிறையா பழங்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு தொடர்பான ஆய்வு செய்து வருகின்றனர்.

அவர்கள் கூறியதாவது: வயல்களுக்கு நடுவே மரங்களுக்கிடையே பராமரிப்பின்றி ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயிலின் கற்ப்பகிரகம், அர்தமண்டபம், மகாமண்டபம் முற்றிலும் சிதைந்துள்ளது. பிற்கால பாண்டிய, விஜயநகர மற்றும் நாயக்க மன்னர்களின் பங்களிப்பு கட்டட கலை, சிற்பக்கலையில் தெரிகிறது. கருவறையில் சிலை இல்லை, நுழைவாயில் துரண்களில் 4 அடி உயர கருடாழ்வார், ஆஞ்சநேயர் சிலை, திருநாமம், சங்கு, சக்கரம், நரசிம்மர் சிற்பம் இருப்பது வைணவ திருத்தலமாக இருந்திருக்க சான்றாக உள்ளது. பெண் பேறுகால நிகழ்வைக் குறிக்கும் புடைப்பு சிற்பங்கள், வயிற்றில் கரு உருவாகுவது மிக நேர்த்தியாக சித்தரிக்கப்பட்டுள்ளன. முன்மண்டபத்தில் செவ்வக கல்லில் ஆட்டுக்கல் மருந்து தயாரிக்கப்பட்டதற்கான ஆதாரம். ஒரு கல்லில் இரண்டு மீன் உருவங்களுக்கு இடையில் செண்டு பொறித்த சின்னம் உள்ளதால் பாண்டியர் காலக் கட்டடம் என உறுதியாகிறது. செவ்வக வடிவ மகாமண்டபத்தில் எட்டு துரண்களில் கலை நுணுக்கங்கள், கல்லால் ஆன ஜன்னல் உள்ளன. தரைத்தளத்தில் ஒரு அடி உயர சிலைகள் மண்ணில் புதைந்துள்ளது. அர்தமண்டபம், கற்ப்பகிரகம் முற்றிலும் சிதைந்துள்ளது. நாராயண பெருமாள் என்ற ஒரு வரி கல்வெட்டும், ஓரிடத்தில் அழகர் என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. கோவில் கட்டியது, பூஜை வழிமுறை குறித்த கல்வெட்டுகள் இல்லை. இரு கல் சுவர்களுக்கு இடையே செங்கல் சுண்ணாம்பு கடுக்காய் வைத்து தயாரிக்கப்பட்டுள்ள கலவை சுவர் மற்றும் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இப்பகுதி மக்களால் கம்பத்தடியான் கோயில் என அழைக்கப்படுகிறது. இக்கோயிலை முறையாக பராமரிப்பதன் மூலம் தமிழர்களின் கட்டட, சிற்பக்கலை, பேறுகால மருத்துவ சிகிச்சை முறைகளையும் தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும் என தெரிவித்தனர். அரசு கோயிலை பழமை மாறாமல் புனரமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !