உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யலூர் திருவிழாவில் வினோத நேர்த்திக்கடன்

அய்யலூர் திருவிழாவில் வினோத நேர்த்திக்கடன்

வடமதுரை: அய்யலூர் தீத்தாகிழவனூரில் காளியம்மன், மாரியம்மன், பகவதியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடக்கும் 3 நாட்கள் திருவிழாவின்

இறுதி நாளில் சேத்தாண்டி வேடம் எனும் வினோத நிகழ்ச்சி நடந்தது. இதில் நேர்த்திக்கடன் செலுத்த விரும்பிய பக்தர்கள் அம்மன் தரிசனம் முடித்து தங்களது உடலில் சேறு, கரி ஆகியவற்றை பூசிக்கொண்டு கோயில் முன்பாக அமர்ந்தனர். பின்னர் மாடுகளின் கழனீர் தொட்டியில் இருந்து பழைய சாதம் கொண்டு வந்து மண் பானைகளில் நிரப்பினர். செருப்பு மற்றும் துடைப்பதை பழைய சாதத்தில் தொட்டு அமர்ந்திருந்த பக்தர்கள் தலையில் அவர்களது உறவினர்கள் அடித்து வினோத நேர்த்திக்கடன் வழிப்பாட்டை நிறைவு செய்தனர். பின்னர் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் ஊர்வலமாக சென்று கோயில் குளத்தில் குளித்தனர். கிராமத்தினர் கூறுகையில், ‘இந்த வினோத நேர்த்திக்கடன் மூலம் சகிப்புத்தன்மை அதிகரித்து, சண்டை, சச்சரவுகள் இன்றி உறவினர்களுடன் ஒற்றுமையாக வாழலாம் என்பதற்காக முன்னோர்களால் இது ஏற்படுத்தப்பட்டுள்ளது’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !