புரவி எடுப்பு திருவிழா
ADDED :1327 days ago
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி, பள்ளபட்டியில் அடைக்கலம் காத்த அய்யணார், செல்லாண்டி அம்மன் கோயில் புரவி எடுப்பு திருவிழா நேற்று துவங்கியது. இரண்டு நாட்கள்
நடைபெறும் திருவிழாவின் முதல் நாள் நேற்று வெள்ளமலையில் இருந்து பக்தர்கள் இரண்டு கி.மீ., தொலைவில் உள்ள பள்ளபட்டி மந்தைக்கு புரவிகளை கொண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று(ஏப்.4) மந்தையில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள கோயிலுக்கு புரவிகள் கொண்டு செல்கின்றனர். இத் திருவிழாவில் பள்ளபட்டி, கொட்டாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சே்ர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.