உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வத்திராயிருப்பு மந்தை மாரியம்மன் கோவில் பூக்குழி கொடியேற்றம்

வத்திராயிருப்பு மந்தை மாரியம்மன் கோவில் பூக்குழி கொடியேற்றம்

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு மந்தை மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு மேல் 7:25 மணிக்குள் நாள்கால் நடுதல், கொடியேற்றம், கணபதி ஹோமம் நடந்தது. பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். ஏப்ரல் 15 அன்று காலையில் காப்புக்கட்டுதல், இரவு 10 மணிக்கு அம்மன் எழுந்தருளல் மற்றும் கரகம் எடுத்தலும், ஏப்ரல் 16 காலையில் பூ வளர்த்தலும், மாலை 4:30 மணிக்கு மேல் பூக்குழி இறங்குதலும் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !