உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாயமங்கலம் முத்துமாரி அம்மன் கோயில் பால்குட விழா

தாயமங்கலம் முத்துமாரி அம்மன் கோயில் பால்குட விழா

தாயமங்கலம்: இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பால்குடம்,ஊஞ்சல் உற்சவம்,பூப்பல்லக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா வருடந்தோறும் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். .இந்தாண்டுக்கான பங்குனி பொங்கல் விழா கடந்த மாதம் 29ம் தேதி இரவு 11:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான பொங்கல் விழா, மின்விளக்கு அலங்காரம் தேரோட்டம் ஆகியவற்றிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த பக்தர்கள் பொங்கல் வைத்தும், தீச்சட்டி,மாவிளக்கு,கரும்பாலை தொட்டில், உருண்டு கொடுத்தல், மொட்டை எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை செலுத்தியும், ஆடு,கோழிகளை பலியிட்டும் அம்மனை வேண்டினர். பால்குடம் ஊஞ்சல் உற்சவம் பூப்பல்லாக்கு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நாளை தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் பங்குனி பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.விழாவில் பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ., மதியரசன், கண்ணமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் தமிழரசன்,தி.மு.க.,விவசாய அணி ஒன்றிய செயலாளர் ராஜபாண்டி, ஒப்பந்ததாரர் ஜெயராமன்,அ.தி.மு.க.,அய்யாச்சாமி,ஜ.டி.,விங்க் மாவட்ட பொருளாளர் கனகராஜ்,ஒன்றிய கவுன்சிலர் கீர்த்தனா உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !