உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குலசை வீரமனோகரி அம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா

குலசை வீரமனோகரி அம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா

உடன்குடி: குலசேகரன்பட்டணம் வீரமனோகரி அம்மன் கோயிலில் இன்று ஆடிப்பூர விழா துவங்குகிறது.குலசேகரன்பட்டணம் வீரமனோகரி அம்மன் கோயிலில் பிரசித்திபெற்றது. இக்கோயிலில் ஆடிப்பூர விழா இன்று இரவு 9 மணிக்கு மாக்காப்பு பூஜையுடன் துவங்குகிறது. நாளை ஆடிப்பூரவிழாவையொட்டி காலை முதல் இரவு வரை சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் பொங்கலிட்டு சாமிதரிசனம் செய்வர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் வீரபாகு வல்லவராயர் செய்துவருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !