உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரி வளர்ப்பு உற்சவ விழா

திரி வளர்ப்பு உற்சவ விழா

பாலமேடு: பாலமேடு அருகே முடுவார்பட்டியில் தேவசேரி, எர்ரம்பட்டி பங்காளிகளின் அழகுமலையான், சீலைக்காரி அம்மன் கோயில் திரி வளர்ப்பு உற்சவ விழா 4 நாட்கள் நடந்தது.கிராம கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்தனர். கிராம மக்களிடம் தானிய விதைப்பு வாங்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். மதுரை வரும் கள்ளழகரை வரவேற்க நேற்று இரவு அழகர், கருப்பணசாமி வேடத்தில் சாமியாடிகள் திரி மற்றும் விதைப்புடன் புறப்பட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !