வடமதுரையில் பாதயாத்திரை ஆண்டு விழா
ADDED :1414 days ago
வடமதுரை: வடமதுரையில் கரகாத்தாள் புற்று மாரியம்மன் சமயபுரம் மாரியம்மன் பாதயாத்திரை குழுவினரின் 38வது ஆண்டு விழா நடந்தது. திருச்சி ரோடு மங்கம்மாள் கேணி விநாயகர் கோயிலில் இருந்து கொடுமுடி காவிரி தீர்த்த குடங்களை கொண்டு வந்து மாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகளை செய்தனர். வேப்பிலை கஞ்சி, அன்னதானம் வழங்கப்பட்டது. அலங்கார மின்ரதத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் ஒரே குழுவாக சமயபுரம் சென்று ஊர் திரும்புவர். ஏற்பாட்டினை பாதயாத்திரை குழு தலைவர் மாரியப்பன், செயலாளர் கிருஷ்ணன், பொருளாளர் சதீஸ்குமார் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்துள்ளனர்.