ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு புதிய நிர்வாக அதிகாரி
ADDED :1301 days ago
ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் புதிய நிர்வாக அதிகாரியாக கே.வி. சாகர் பாபு என்பவரை நியமித்து ஆந்திர மாநில அறநிலை துறை முதன்மை ஆணையாளர் ஹரி ஜவஹர்லால் அரசு ஆணையை வெளியிட்டார் .இங்கு சிவன் கோயில் நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்த பெத்தி.ராஜுவை (சாலை மற்றும் போக்குவரத்து ) கடப்பா மாவட்ட சிறப்பு துணை கலெக்டராக பணி இடமாற்றம் செய்துள்ள நிலையில் திருப்பதி வட்டார இணை ஆணையராக பணிபுரிந்து வரும் சாகர்பாபுவை ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் ( எஃப்.எ.சி) (full Additional charge)நிர்வாக அதிகாரியாக நியமித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.