உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கற்கும் கல்வி தொழிலுக்கானது மட்டுமல்ல காமாட்சிபுரி ஆதீனம் அறிவுரை

கற்கும் கல்வி தொழிலுக்கானது மட்டுமல்ல காமாட்சிபுரி ஆதீனம் அறிவுரை

பல்லடம்: நாம் கற்கும் கல்வி தொழிலுக்கான அதுமட்டுமல்ல. நல்ல பண்புகளை வளர்க்கவும் அவசியமாகும் என, காமாட்சிபுரி ஆதீனம் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

பல்லடம் அடுத்த, அருள்புரம் ஜெயந்தி பள்ளி மாணவ மாணவியர், தேர்வில் வெற்றி பெற வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்தனர். சித்தம்பலம் நவகிரக கோட்டையில், மாணவ மாணவியருக்கு சிறப்பு  வேள்வி வழிபாடு நடந்தது. காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் பங்கேற்று பேசியதாவது, மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகிய நால்வரையும், போற்ற வேண்டும், வணங்க வேண்டும் என்ற  எண்ணத்தை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். கல்வியறிவு மட்டுமன்றி தெய்வ பக்தியும் மிகுந்து இருக்க வேண்டும். யாரிடம் தெய்வபக்தி அதிகம் உள்ளதோ அவர்கள் தாய்தந்தையரை  மதிப்பவராகவும், தெய்வ பக்தியில் சிறந்தும் இருப்பர்.‌ இளமையில் கல் என்று கூறுவர். இளமை காலத்தில் நல்லவர்களோடு பழகி, நல்ல விஷயங்களை கேட்டு, நல்ல பண்புகளை வளர்துது வீட்டுக்கும்  நாட்டுக்கும் உரியவர்களாக நம்மை நாம் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். கற்கும் கல்வி தொழிலுக்கானது மட்டுமல்ல. நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ளவும் கல்வி அவசியம்‌ என்றார். முன்னதாக,  பள்ளி மாணவ மாணவியர், நவகிரகங்களுக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டனர். தொடர்ந்து, தேர்வால் வெற்றி பெற வேண்டி பிரார்த்தனை செய்த மாணவர்களுக்கு, காமாட்சிபுரி ஆதீனம் பேனா வழங்கி ஆசி  தெரிவித்தார். பள்ளி தாளாளர் கிருஷ்ணன், மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !