உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கோவிலில் ராமானுஜர் ஜெயந்தி விழா

பெருமாள் கோவிலில் ராமானுஜர் ஜெயந்தி விழா

அன்னூர்: அன்னூர் பெருமாள் கோவிலில், 5ம் தேதி ராமானுஜர் ஜெயந்தி விழா நடக்கிறது. அன்னூரில் உள்ள பழமையான ஸ்ரீதேவி, பூ தேவி, சமேதர ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவிலில், ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி உற்சவ விழா 5ம் தேதி நடைபெறுகிறது. காலை 6:30 மணிக்கு விஷ்வக்சேனர் ஆராதனை, ஹோமம் நடக்கிறது. இதையடுத்து அலங்கார பூஜை, தீபாராதனை, சுவாமி உட்பிரகாரத்தில் உலா வந்து அருள் பாலித்தல் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !