உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அட்சய திருதியை : கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்

அட்சய திருதியை : கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்

தஞ்சாவூர், கும்பகோணத்தில் அட்சய திருதியை நாளான 12 கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டுதோறும், சித்திரை மாதம் வளர்பிறையில், அமாவாசைக்கு பிறகு வரும், மூன்றாவது திதி, அட்சய திருதியை தினத்தன்று தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள, 12 வைணவ கோவில்களிலிருந்து, 12 கருட வாகனங்களில் உற்சவ பெருமாள் சுவாமிகள் புறப்பட்டு, பெரிய தெருவில் அமைந்துள்ள அலங்கார பந்தலில், ஒரே இடத்தில் எழுந்தருளி பொதுமக்களுக்கு அருள்பாலிக்கும் கருடசேவை நடைபெற்றது.

இதை முன்னிட்டு, சாரங்கபாணி சுவாமி, சக்கரபாணி சுவாமி, 12 பெருமாள் கோவில்களின் உற்சவ பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருள, நேர் எதிரே ஆஞ்சநேயர் எழுந்தருளினார். இந்த உற்சவ பெருமாள்கள் கருட வாகனத்தில் வந்தவுடன், அந்த பெருமாள்களுக்கு முன்பு திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார் காட்சி பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !