கூடலுார் காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா
ADDED :1263 days ago
கூடலுார்: கூடலுார் காளியம்மன் கோயிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். யாகசாலை பூஜையுடன் துவங்கிய இவ்விழாவில் புனித தீர்த்தம் வைக்கப்பட்ட கும்ப கலசங்களுக்கு மூன்று கால பூஜை நடத்தப்பட்டது. பால், பன்னீர், இளநீர், திரவியம் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்யப்பட்டது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை வ.உ.சி., வெள்ளாள பெருமக்கள் சங்கத்தினர் செய்திருந்தனர்.