தர்ம முனிஸ்வரர் கோயிலில் 108 விளக்கு பூஜை
ADDED :1362 days ago
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் காவல்காரன் சந்து அருகே தர்ம முனிஸ்வரர் கோயில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு 108 விளக்குபூஜை நடந்தது. அதற்கு முன்பாக பக்தர்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.மூலவரான தர்ம முனீஸ்வரருக்கு பால்,மஞ்சள், இளநீர், வாசனை திரவியங்கள் உட்பட 21 வகையான அபிஷேகங்கள், சிறப்புபூஜை நடந்தது.பின்பு 108 விளக்கு பூஜை நடந்தது. விளக்கு பூஜை ஏற்பாடுகளை தலைமைஆசிரியர் காளிமுத்து, ஆசிரியர் உமாராணி செய்தனர். விழாவில் முதுகுளத்தூர் சுற்றியுள்ள பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். விழாகமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.